அரிசி புட்டு (Arisi puttu recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

அரிசி புட்டு (Arisi puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப்பச்சரிசி
  2. அரை மூடிதுருவிய தேங்காய்
  3. உப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து அரை மணி நேரம் உலர வைத்து மிக்ஸியில் சற்று ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். புட்டு பாத்திரத்தை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பச்சரிசி மாவை ஒரு கப் எடுத்து கால் டம்ளர் அளவு தண்ணீரை கொஞ்சமாக தெளித்து உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவு கட்டி விழாமல் உதிரி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தேங்காயில் துருகி தயாராக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    புட்டு குழலில் துருவிய தேங்காய் ஒரு லேயர் மாவு அடுத்து லேயராக வரிசையாக நிரப்பி வரவும். புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மாவு நிரப்பிய புட்டுக் குழாயை அதனுள் பொருத்தி 10 நிமிடம் வேக விடவும்

  4. 4

    புட்டுக் குழாயில் மேலுள்ள மூடிகள் புட்டு வேக வெந்தவுடன் ஆவியானது வெளிவரும் பிறகு புட்டு தயாராகிவிட்டது.

  5. 5

    சுவையான அரிசி புட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes