தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#steam
சத்தான மற்றும் சுவையான ராகி சேமியா..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 300கிராம்ராகி சேமியா
  2. தண்ணீர்
  3. உப்பு
  4. தாளிக்க:
  5. 3 டீஸ்பூன்எண்ணெய்
  6. கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை
  7. 1பச்சை மிளகாய்
  8. 1பெரிய வெங்காயம்
  9. 1தக்காளி
  10. துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ராகி சேமியாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவிடவும்.

  2. 2

    பத்து நிமிடங்களுக்கு இட்லி பாத்திரத்தில் வேக விடவும். வெந்தவுடன் ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

  3. 3

    தாளிப்பதற்கு தேவையான வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளியை நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பிறகு தக்காளியை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். ஆற வைத்த சேமியாவை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

  5. 5

    நன்றாக கலந்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான ராகி கார சேமியா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes