ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

#steam
காய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும்.

ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)

#steam
காய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் பீன்ஸ்
  2. 1வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1 ஸ்பூன் நல்லெண்ணை
  6. கடுகு
  7. உளுந்து
  8. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பீன்ஸை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீன்ஸ் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    பின் நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் ஆவியில் வேக வைத்த பீன்ஸ் துண்டுகளை சேர்த்து கிளறவும்.

  5. 5

    இறுதியில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    சுவையான மற்றும் சத்தான ஆவியில் வேகவைத்த, எண்ணெய் குறைவான, பீன்ஸ் பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes