பீன்ஸ் கிரேவி /Beans Gravy

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Goldenapron3
#Lockdown2
பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் .

பீன்ஸ் கிரேவி /Beans Gravy

#Goldenapron3
#Lockdown2
பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. 100 கிராம் பீன்ஸ்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 5 பல் பூண்டு
  5. 2 பச்சை மிளகாய்
  6. தேங்காய் பால்
  7. உப்பு
  8. 2டீஸ்பூன் தனியா தூள்
  9. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  11. தாளிக்க
  12. 3டீஸ்பூன் ஆயில்
  13. 1/2டீஸ்பூன் கடுகு
  14. 1/2டீஸ்பூன் வெந்தயம்
  15. கருவேப்பிலை
  16. கொத்தமல்லி தழை
  17. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    பீன்ஸ் 100 கிராம் கழுவி நறுக்கி வைக்கவும்.தக்காளி 1 கழுவி நறுக்கி வைக்கவும்.பூண்டு 5 பல் பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் 2 கழுவி விதை நீக்கி வைக்கவும்.பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி வைக்கவும்.தேங்காய் 1/2 மூடி துருவி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து வைக்கவும்.முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.வதக்கியதை தனியாக கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும். அதில் மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,தனியா தூள் 2 டீஸ்பூன்,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    வதக்கி வைத்த பீன்ஸ் சேர்க்கவும்.கலக்கி விட்டு பீன்ஸ் வெந்தவுடன் சீரகத்தூள் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்தவுடன் முதல் தேங்காய் பால் சேர்க்கவும்.கலக்கி விடவும்.

  5. 5

    கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன்,வெந்தயம் 1/2 டீஸ்பூன் தாளித்து பீன்ஸ்சில் சேர்க்கவும்.நறுக்கிய கொத்தமல்லி மேலே தூவவும். பீன்ஸ் கிரேவி ரெடி.சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes