மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
11 பரிமாறுவது
  1. 1கப் மைதா
  2. 3/4 கப் இனிப்பில்லாத கோவா
  3. 2 டேபிள்ஸ்பூன் கெட்டி தயிர்
  4. 2 டேபிள்ஸ்பூன்நெய்
  5. 1/4 டீஸ்பூன் சமையல் சோடா
  6. 1-2 டேபிள்பூன் தண்ணீர்
  7. 2 கப் சர்க்கரை
  8. 2 கப் தண்ணீர்
  9. சிறிதுகுங்குமப்பூ
  10. நறுக்கிய பாதம், முந்திரி, பிஸ்தா

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முதலில் இனிப்பில்லாத கோவா(செய்முறை பக்கத்தில் உள்ளது தேவை என்றால் பார்த்துக் கொள்ளவும்) கோவாவை கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும் பிறகு இதில் மைதா மாவு தயிர்

  2. 2

    சோடா நெய் ஆகியவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    இப்போது தேவையான அளவு தண்ணீர் 1 டேபிள்ஸ்பூன் அல்லது 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து மெதுவான பதத்திற்கு பிசைந்து 15 நிமிடம் துணியால் மூடி வைக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை குங்குமப்பூ சேர்க்கவும்

  5. 5

    சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் கம்பி பதம் தேவையில்லை தொட்டுப்பார்த்தால் பிசுபிசு என இருந்தால் போதும்... ஒரு கப்பில் பாதாம் முந்திரி பிஸ்தாவை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும் (11 உருண்டைகள் வரும்) படத்தில் காட்டியவாறு உருண்டையை தட்டையாக தட்டி அதில் நறுக்கி வைத்த பருப்பு சேர்க்கவும்

  7. 7

    பருப்புகளை உள் வைத்து உருண்டைகளை நன்றாக உருட்டிக் கொள்ளவும் பிறகு படத்தில் காட்டியவாறு சிறு தட்டையாக தட்டிக் கொள்ளவும்

  8. 8

    அனைத்தையும் தயார் செய்த பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து எண்ணெய் சூடான பிறகு மிதமான தீயில் வைக்கவும்

  9. 9

    இப்போது தயார் செய்து வைத்த பேடாவை இதில் சேர்த்து மிதமான மற்றும் குறைந்த தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் (குறைந்த தீயில் வைத்தால் உருண்டைகள் விரிசல் விழுந்து விடும் மிதமான மற்றும் குறைந்த தீயில் மாறிமாறி பொரித்தெடுக்கவும்)

  10. 10

    பொரித்தெடுத்த மக்கன் பேடாகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் நன்றாக ஊறியதும் இரண்டு மடங்காக பெரிதாகி வரும்

  11. 11

    அனைவருக்கும் பிடித்த மக்கள் பேடா தயார்

  12. 12

    நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes