முளைக்கட்டிய தானிய கோலா உருண்டை(Sprouted Cereal balls recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

*அனைத்து தானியங்களையும் முளை விட வைத்து உபயோகிப்பதால் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பண்டம்.

* கொடுத்துள்ள அனைத்து தானியங்களையும் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி பத்து மணி நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் ஒரு நாள் முழுக்க முளை விட வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* இதுபோல் முளைகட்டிய தானியங்களை வைத்து உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

*இதை வேண்டும் அளவுக்கு எடுத்து உபயோகித்து மீதி உள்ள தானியங்களை ப்ரிட்ஜ் ப்ரிஸரில் வைத்து தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.

#deepfry

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/4 கப் பச்சைப்பயிறு
  2. 1/4 கப் கோதுமை
  3. 1/4 கப் கொள்ளு
  4. 1/4 கப் கருப்பு உளுந்து
  5. 2உருளைக்கிழங்கு வேக வைத்தது
  6. 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
  11. ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு பொடியாக நறுக்கியது
  12. கொத்தமல்லி சிறிதளவு
  13. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  14. சிறிதளவுஸ்பிரிங் ஆனியன்(விருப்பப்பட்டால்)
  15. 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  16. 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முளைக்கட்டிய தானியங்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொண்டு வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், சோள மாவு,அரிசி மாவு, ஸ்பிரிங் ஆனியன்,கொத்தமல்லி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்துள்ள உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ள முளைகட்டிய தானிய கோலா உருண்டை தயார்.இதனை தக்காளி சாஸ் உடன் பரிமாறினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes