பச்சைப்பயறு கோதுமை பரோட்டா(Green gram parotta) (Pachai payaru kothumai parotta recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

பச்சைப்பயறு கோதுமை பரோட்டா(Green gram parotta) (Pachai payaru kothumai parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப்கோதுமை மாவு
  2. 1/2கப்பச்சைப்பயறு
  3. 5பூண்டு பல்
  4. 1டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  5. 1ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. 4டேபிள் ஸ்பூன்எண்ணெய் /நெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஸ்டப்பிங் செய்வதற்கு, பாசிப்பயறை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்,ஊற வைத்த பச்சை பயறை குக்கரில் போட்டு, பூண்டு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்,...

  2. 2

    வேகவைத்த பாசிப்பயிறு கலவையை,எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்,...

  3. 3

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு, சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்,.. மாவு காயாமல் இருக்க மேலாக எண்ணெய் தடவிக் கொள்ளவும்,...

  4. 4

    மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் கனமாக தேய்த்து நடுவில் பாசிப்பயறை, வைத்து ஓரங்களை மூடிவிடவும்,...

  5. 5

    பின்னர் அதைஅழுத்தம் கொடுக்காமல்,லேசாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்,இதேபோல் மற்ற உருண்டைகளையும் தேய்த்து வைத்துக் கொள்ளவும்,....

  6. 6

    தோசை கல்லில் தேய்த்து வைத்த பரோட்டாவை, போட்டு,நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்,...

  7. 7

    சத்தான, சுவையான பச்சைப்பயறு பரோட்டா ரெடி,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes