கேரட் பொட்டுக்கடலை வடை (Carrot and RoastedGram Wadaa) (Carrot po

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#deepfry
#ilovecooking
பொட்டுக் கடலையில் நிறைய சத்துக்கள் உள்ளன. கேரட் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு இது போல வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 3கேரட்
  2. 3/4கப்,பொட்டுக்கடலை
  3. 1நறுக்கிய பெரிய வெங்காயம்
  4. கறிவேப்பிலை மல்லி இலை,
  5. ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள்
  6. பெருங்காயத்தூள் சிறிதளவு,
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கேரட்டை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அடித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    முதலில் துருவிய கேரட் உடன் வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.

  5. 5

    அந்த கலவையுடன் பொடித்து வைத்திருந்த பொட்டு கடலை மாவையும் சேர்த்து பிசையவும். வடை மாவு தயார்.

  6. 6

    இப்பொழுது தேவையான வடிவங்களில் வடை தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    மிதமான தீயில் இருபுறமும் சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான, மிகவும் சத்துக்கள் நிறைந்த கேரட் பொட்டுக்கடலை வடை ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes