காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)

எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரித்து தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஃபிலிங் செய்ய:மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், பச்சைவெங்காயம் சேர்த்து கிளற.. பச்சை பட்டாணி +கேரட், முட்டை கோஸ் போட்டு கிளறி மேலும் 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வதக்க, மஞ்சள் பொடி, மசாலா பொடி உப்பு சேர்த்து, கிளறவும். முட்டை கோஸ் குழைய கூடாது; கிரிஸ்பாக வேண்டும். கொத்தமல்லி போட்டு கிளற. ஃபிலிங் தயார். குளிர வைக்க.
- 3
ரேப் செய்ய: ஒரு கிண்ணத்தில் மாவுகளை உப்பு சேர்த்து ¾ கப் நீர் சேர்க்க. விஸ்க் செய்க. தோசை மாவு பதத்தீர்க்கு சிறிது தண்ணீயாக இருக்க வேண்டும். 1/4 கப் மாவை சீல் செய்ய தனியாக எடுத்து வைக்க. மீடியம் லோ ஹீட் மேல் ஒரு நான் ஸ்டிக் ஸ்கிலேட் வைக்க. எண்ணை தடவி துடைக்க ஒரு பிரஷால் மாவை ஸ்கிலேட் மேல் தடவுக (படம்), மெல்லிய ரேபை கையால் தூக்கி எடுத்துவிடலாம். கிர்ஸ்ப் ஆக்காதீர்கள். கிர்ஸ்ப் ஆக இருந்தால் சுருட்ட முடியாது
- 4
ரேப் ஓரங்களில் மாவு தடவுக. கீழிலிரிந்தும், பக்கங்களிறிந்தும் 1 அங்குலம் இடைவெளிவீட்டு ¼ கப் ஃபிலிங்கை படத்தில் இருப்பது போல வைக்க. முதலில் போல்ட் செய்க.. ஃபிலிங்கிர்க்கு கீழ் உள்ள ரேப்பால் ஃபிலிங்கை மூடுக. சுருட்டி மேல் பாக ரேப்பால் மூடி சீல் செய்க. பிராக்டிஸ் வேண்டும். கிழிந்து விட்டால் இன்னொரு ரேப் சுருட்டி சீல் செய்க. பொறிக்க ரோல் தயார். நான் 8 ரோல் செய்தேன்
- 5
பொறிக்க: மீடியம் ஹீட் மேல் ஒரு வாணலியில் எண்ணை எடுதது கொள்ளுங்கள். சூடான எண்ணையில் பொறிக்க. பொன்னிறமாகவேண்டும். எண்ணை வடித்து பேப்பர் டவல் மேல் போடுக. சுவையான கிர்ஸ்ப் (crisp) காய்கறி ரோல் தயார். சூடாக இருக்கும் பொழுதே ருசி பார்க்க சில்லி சாஸ் அல்லது தக்காளி கேட்சப் கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


KFC ஸ்டைல் வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் (KFC STYLE VEGGIE STRIPS)


ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)


முட்டைகோஸ் கறியமுது


சுவை சத்து கூடிய பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)


எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)


கட்லெட் (Cutlet recipe in tamil)


பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


பாதூஷா (Badhusha recipe in tamil)


வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)


காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)


Veggie Rice Recipe in Tamil


சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


காய்கறி கசோரி


கதம்பம் சோறு (Kathambam soru recipe in tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


மஞ்சூரியன்


வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)


ஸ்டவ்ட் சுருள் தோசை


கட்லெட்(cutlet recipe in tamil)

கமெண்ட் (3)