அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் பாசிப்பருப்பு
  2. முக்கால் கப் நெய்
  3. கால் கப் எண்ணெய்
  4. 10முந்திரிபருப்பு
  5. 6ஏலக்காய்
  6. 2ஸ்பூன்கோதுமை மாவு
  7. ஒரு கப்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

1.30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வறுத்த பருப்பை அலசி குக்கரில் தண்ணீர் ஊற்றி (ஒரு கப்பிற்கு 2 கப் தண்ணீர்) 5 விசில் விடவும். வெந்த பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாய் சூடான பின்பு நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே நீரில் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பச்சை வாசனை சென்றபின் அரைத்து வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்.

  4. 4

    இப்பொழுது நெய் சேர்த்து என்னை சேர்க்கும் கிளறிக் கொண்டே இருக்கவும் கைவிடாமல் கிளற வேண்டும். பின்பு எண்ணெயும் நெய்யும் சேர்த்து சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் சிறிது கெட்டியாகும் பதத்தில் வந்தவுடன் ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும்.

  5. 5

    சர்க்கரை சேர்த்தவுடன் சிறிது இளகி வரும்.அப்போது மறுபடியும் எண்ணெயும் நெய்யும் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் கையில் ஒட்டாமல் வரும் பதம் வந்தவுடன் எடுத்து வைத்திருக்க ஏலக்காய் சேர்க்கவும். இது ஒரு மணி நேரம் அல்லது ஒன்னேகால் மணி நேரம் கண்டிப்பாக இருக்கும். (கையில் ஒட்டாமல் இருப்பது தான் பதம் அசோகா வில் மட்டும் ஊற்றிய நெய் பிரிந்து மேலே வரும் அதுவும் ஒரு பதம்) அதன் பின்பு எடுத்து வைத்திருக்கும் ஆரஞ்சு அல்லது எல்லோ கலர் சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    பின்பு கையில் ஒட்டாமல் வந்தவுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes