ஹைதராபாத் பிரியாணி

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#ap

ஹைதராபாத் பிரியாணி

#ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் பாஸ்மதி அரிசி
  2. 1/2 கிலோ மட்டன்
  3. 2 கப் தேங்காய் பால்
  4. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  5. 2 தக்காளி அரைத்த விழுது
  6. 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1/4 கப் கெட்டித் தயிர்
  9. 3 டேபிள் ஸ்பூன் முந்திரி பாதாம் அரைத்த விழுது
  10. 1கைப்பிடி அளவு நறுக்கிய புதினா இலை
  11. 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி தழை
  12. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 2_1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 1_1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த மசாலா பொடி
  15. 2 ஸ்பூன் லெமன் சாறு
  16. கல் உப்பு தேவையான அளவு
  17. தாளிக்க:
  18. 1/4 கப் நெய்
  19. 6 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  20. 1/2 ஸ்பூன் சோம்பு
  21. 1பிரியாணி இலை
  22. 2பட்டை
  23. 2 கிராம்பு
  24. 2 ஏலக்காய்
  25. 2 அன்னாச்சி பூ
  26. வறுத்து பொடிக்க:
  27. 4 பட்டை
  28. 4 கிராம்பு
  29. 4 ஏலக்காய்
  30. 4 அன்னாச்சி பூ
  31. 4 மராத்தி மொக்கு
  32. ஜாதிபத்திரி சிறிது
  33. கல்பாசி சிறிது
  34. காய்ந்த ரோஜா இதழ் சிறிது
  35. 4 பெரிய ஏலக்காய்
  36. 1 ஸ்பூன் சீரகம்
  37. 1 ஸ்பூன் மல்லி விதை
  38. 2 ஸ்பூன் சோம்பு
  39. 1 ஸ்பூன் கசகசா

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசி ஐ வெதுவெதுப்பான நீரில் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தண்ணீரை வடிகட்டி 2 ஸ்பூன் நெய் விட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து வதக்கி கொள்ளவும்

  2. 2

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் (இத வறுக்கறதுல தான் பிரியாணி உடைய மணமே இருக்கிறது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்)

  3. 3

    அடி கணமான வாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாச்சி பூ பிரியாணி இலை மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை போனதும் நறுக்கிய புதினா இலை ஐ சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின் அரைத்த தக்காளி (தக்காளி நன்கு பழுத்த சிவப்பு நிறத்தில் இருப்பது நல்லது பிரியாணிக்கு கூடுதலாக நிறத்தை கொடுக்கும்)

  6. 6

    பின் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும், பின் சுத்தம் செய்து அலசிய மட்டனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  7. 7

    பின் தயிர் சேர்த்து அரைத்த முந்திரி பாதாம் விழுதை சேர்த்து கூட இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வதக்கவும் 20 நிமிடங்கள் வரை அடுப்பை மெல்லிய தீயில் வைத்து வதக்கவும்

  8. 8

    பின் நெய்யில் வதக்கி வைத்துள்ள அரிசியை சேர்த்து லெமன் சாறு விட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறவும் பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்

  9. 9

    பின் 10 நிமிடம் கழித்து திறந்து மீதமுள்ள நெய்யை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி (விருப்பட்டா இதில் வறுத்த முந்திரி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து கொள்ளவும்) திரும்பவும் மூடி மேலே கணமான கல் அல்லது சப்பாத்தி கட்டையை வைத்து அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வரை வைக்கவும்

  10. 10

    பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே ஐந்து நிமிடம் வரை வைத்து திறந்து அரிசி உடையாமல் மெதுவாக கிளறி பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்

  11. 11

    சுடச் சுடச் பிரியாணி ரெடி தயிர் பச்சடி உடன் சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes