குபானி கா மீத்தா (Khubani ka meetha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்ரிக்காட் பழத்தை வெதுவெதுப்பான நீரில் 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் நன்கு ஊறியதும் அதை படத்தில் காட்டியவாறு பிரித்து விடவும் உள்ளே இருக்கும் பல்ப் தெரியுமாறு இரண்டாக விரிக்கவும் அப்போது தான் நன்கு மசிந்து வரும்
- 3
பின் ஒரு நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
- 4
பின் அதே பேனில் ஆப்ரிக்காட் பழத்தை ஊறவைத்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும் பின் கொதிக்கும் போது ஆப்ரிக்காட் பழத்தை சேர்த்து சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்
- 5
ஆப்ரிக்காட் பழம் தண்ணீர் மற்றும் சர்க்கரை மூன்றும் சேர்ந்து நன்கு திக்காகி சாஸ் பதத்தில் வரும் போது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை கிளறவும்
- 6
ஒரு அளவிற்கு மசிந்து வரும் போது மத்தால் அவ்வப்போது நன்கு மசித்து கொண்டே இருக்கவும் அப்போது தான் அந்த பழத்தின் பல்ப் நன்கு கிடைக்கும்
- 7
பின் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு தொடர்ந்து கிளறவும் எந்த விதமான கலரும் தேவையில்லை பழம் சர்க்கரை உடன் சேர்ந்து வெந்து மசிந்து வர வர இயற்கையாகவே நல்ல ஆரஞ்சு நிறத்தை கொடுத்து பார்க்கவே நன்றாக இருக்கும்
- 8
இந்த பதம் வந்ததும் லெமன் சாறு விட்டு தொடர்ந்து கிளறவும்
- 9
பின் வறுத்த முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 11
பின் நன்கு ஒருமுறை கிளறி பரிமாறும் கப்பில் மாற்றி மேலே மலாய் க்ரீம் அல்லது மில்க்மெயின்ட் ஐ ஊற்றி சிறிது நட்ஸ் தூவி சூடாகவோ அல்லது குளிரவிட்டோ பரிமாறவும்
- 12
சுவையான ஹைதராபாத் ஸ்பெஷல் டெசர்ட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
ரோஸ் சிரப்(rose syrup recipe in tamil)
எந்த விதமான கலர் மற்றும் ரசாயனமும் இல்லாமல் மிகவும் எளிய முறையில் வீட்டுலயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்