கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1.5 கப்கேழ்வரகு மாவு
  2. 10ஏலக்காய்
  3. 1 கப்வெல்லம்
  4. 1கைப்பிடி அளவுமுந்திரி, பாதாம்,காய்ந்த திராட்சை
  5. 3 மேசைக்கரண்டிநெய்
  6. 1/4 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அகன்ற கனமான பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் கேழ்வரகு மாவை கொட்டி கிளறவும். நெய்யுடன் மாவு கலந்து உதிரியாக வரும் வரை கிளறவும். மாவு உதிரியான பின் அடுப்பை அணைத்து தனியாக வைத்து விடவும்.

  2. 2

    அடுத்ததாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெள்ளத்தை காய்ச்சி
    பாகுஎடுத்துக்கொள்ளவும்.
    பாகு கைகளில் ஒட்ட வேண்டும்.பாகு காய்ச்சி ஆறியதும் எடுத்து வைத்துள்ள கேழ்வரகு மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும். அதோடு காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம்,ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    கிளறியதும் கைகளில் நெய் தடவிக்கொண்டு விருப்பம் போல் சிறிதாகவோ பெரிதாகவோ உருண்டையாகப் பிடித்து வைக்கவும். அவ்வளவுதான் கேழ்வரகு லட்டு தயார். நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்காரபெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes