பசும் தயிர் சாதம்

Jaya Kumar
Jaya Kumar @cook_26377999

#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. பச்சரிசி சாதம் 2கப்
  2. பசும்பால் தயிர் 3கப்
  3. காய்ச்சிய பால் 1/2கப்
  4. பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப்
  7. மல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  8. கேரட் துருவல் கால் கப்
  9. மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை அல்லது கிஸ்மிஸ் பழம் கால் கப்
  10. தாளிக்க எண்ணெய்
  11. கடுகு உளுந்து கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  12. சீரகம் அரை ஸ்பூன்
  13. பெருங்காயத்தூள் சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சாதம் பச்சரிசி சாதம் படித்தவர்கள் இதை பயன்படுத்தலாம் பிடிக்காதவர்கள் புழுங்கல் அரிசி சாதத்தை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்

  2. 2

    சாதத்தை கரண்டியால் நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும் அதில் 2 கப் தயிர் அரை கப் பால் ஊற்றி சிறிது உப்பு போட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பிசைந்து வைத்து விடவும்

  3. 3

    தாளிப்பதற்கு தவாவை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து சீரகம் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும் அதில் முதலில் இஞ்சி பச்சை மிளகாய் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும் அத்துடன் கிஸ்மிஸ் பழம் சேர்த்து வதக்கி பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை மல்லி போடவும் பெருங்காயத்தூள் சேர்க்கவும் அதில் மீதமுள்ள ஒரு கப் தயிரை ஊற்றி சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்

  5. 5

    இந்தக் கலவையை கலந்து வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும் நன்கு கலந்ததும் கேரட் துருவலை பச்சையாகவும் விருப்பபட்டால் சேர்க்கலாம் இல்லையென்றால் வேண்டாம் கலந்து அதன் மேல் மாதுளை முத்துக்கள் போட்டு மூடி வைக்கவும் இந்த கலவை நன்கு அரை மணி நேரம் ஊற வேண்டும் சாப்பிடும்போது எடுத்து பரிமாறினால் பால் வாசத்துடன் தயிர் வாசமும் கலந்து இந்தக் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும் இதை ஒரு முறை செய்து சுவைத்துப் பார்த்து கூறுங்கள் எப்படி இருந்தது என்று

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Jaya Kumar
Jaya Kumar @cook_26377999
அன்று

Similar Recipes