🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது ஹோட்டல் சமையல் போல் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமானது. #ilovecooking

🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰

சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது ஹோட்டல் சமையல் போல் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமானது. #ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 100g பீட்ரூட்
  2. 1 தக்காளி
  3. 1 வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1/2 தேங்காய்
  6. 4 பல் பூண்டு
  7. சிறிதளவுஇஞ்சி
  8. 2 ஏலக்காய்
  9. சிறிதளவுபட்டை
  10. தேவையானஅளவு சோம்பு
  11. 3பீஸ் கிராம்பு
  12. சிறிதளவுகல்பாசி பூ
  13. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  14. 1 ஸ்பூன் மஞ்சத்தூள்
  15. உப்பு தேவையான அளவு
  16. கொத்தமல்லி தேவையான அளவு
  17. கருவேப்பிலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேங்காயுடன் இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு சோம்பு கல்பாசி பூ ஏலக்காய் எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    பீட்ரூட்டை பெரியதாக நறுக்கி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சோம்பு வெந்தயம் தாளிக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி வதங்கியதும் அரைத்த தேங்காயை சேர்க்கவும் இதனுடன் மல்லித்தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் கொதிவந்ததும் வேகவைத்த பீட்ரூட்டை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் இதனுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்க்கவும்

  6. 6

    இப்போது சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். 🍲

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes