நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ga4
தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 எண்ணிக்கை
  1. 6கரண்டிதோசை மாவு
  2. இட்லி பொடி வேண்டிய அளவு
  3. நெய்
  4. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தோசை மாவு, இட்லி பொடி, நெய், எண்ணெய் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடுபடுத்தவும்.

  2. 2

    தோசைக்கல் சூடு ஏறியவுடன் தோசை மாவை கல்லில் ஊற்றி மெல்லிதாக தேய்க்கவும். தேவையான அளவு நெய்யை தோசை மேல் ஊற்றவும். தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றி கொள்ளவும். இட்லி பொடியை தோசை முழுவதும் பரவலாக நிறைய தூவி விடவும். ஒரு நிமிடம் வரை வைத்திருக்கவும். பிறகு தோசைக் கரண்டியால் பொடியை நன்றாக நிரவி விடவும். ஒரு மூடிக்கொண்டு தோசை கள்ளை மூடி மிதமான தீயில் தோசை சிவக்க வேக விடவும்.

  3. 3

    தோசையை திருப்பிப் போடத் தேவை இல்லை. மூடி வைத்து மிதமான தீயில் வேக விடுவதால் தோசைஉள் பக்கம் நன்கு வெந்து இருக்கும். இப்போது தோசையை மடித்து சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes