பட்டர் பீன்ஸ் ஃப்ரை

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

பட்டர் பீன்ஸ் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. பட்டர் பீன்ஸ் அரை கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. தேங்காய் துருவல் கால் கப்
  5. பூண்டு
  6. மிளகு 10
  7. பட்டை
  8. இலை
  9. பூ
  10. சோம்பு 1 ஸ்பூன்
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. தண்ணிர்
  14. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  15. கரம் மசாலா ஒரு பின்ச்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பட்டர் பீன்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சோம்பு பூண்டு மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை இலை பூ அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும். அதோடு பட்டர் பீன்ஸ் சேர்க்கவும்

  4. 4

    பின் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து கிளறவும். அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதோடு சேர்த்து நன்கு சுருள கிண்டவும்

  5. 5

    ஐந்து நிமிடம் கிண்டிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 2 விசில் விடவும். மிகவும் சுவையான பட்டர் பீன்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes