தாராபுரம் கரம், கரூர் கரம்.(gharam)

என் பூர்வீக ஊரான கரூர் மற்றும் தாராபுரத்தில் பிரபலமான ஸ்நேக் வகை..
தாராபுரம் கரம், கரூர் கரம்.(gharam)
என் பூர்வீக ஊரான கரூர் மற்றும் தாராபுரத்தில் பிரபலமான ஸ்நேக் வகை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கரூர் கரத்திற்கு முதலில் சட்னி விழுதை அரைத்துக் கொள்ளலாம் தேங்காய் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.. அரைக்கும் பொழுது தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 3
துருவிய பீட்ரூட் கேரட் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை ஒன்றாக சேர்த்து அதில் எலுமிச்சம் பழ சாற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கிண்ணத்தில் தேவையான பொரியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு மேசைக்கரண்டி சட்னி விழுது,ஒரு மேசைக்கரண்டி காய் விழுது சேர்த்துக் நன்றாக கலந்து உடனே பறிமாறவும்
- 5
இதில் ஓமப்பொடி அல்லது மிக்சர் அல்லது தட்டுவடை நொறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்
- 6
பொரிக்கு பதிலாக சமோசா அல்லது போண்டாவை துண்டு துண்டாக செய்துகூட சேர்த்துக்கொள்ளலாம்.. இது கரூர் கடைகளில் சமோசா கரம் போன்டா கரம் என்று கூட கிடைக்கும்.. நான் வீட்டில் செய்த முறுக்கு கொண்டு கூட செய்து பார்த்தேன்
- 7
தாராபுரம் கரத்திற்ககு முதலில் சட்னி விழுதை அரைத்துக் கொள்ளவும்
- 8
சட்னி விழுதிற்கு சிறிய வெங்காயம் சிவப்பு மிளகாய் சீரகம் மற்றும் பெருங்காயத்தை நன்கு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் அரைக்கும் பொழுது உப்பு சேர்த்து கொள்ளவும்
- 9
ஒரு தட்டில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் மற்றும் பீட்ரூட் பொடி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் அனைத்தையும் தனி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.. விழுது அரைத்த பின் அதில் ஒரு சிறிய வெங்காயத்தை தனியாக நறுக்கி விழுதில் சேர்த்து கலந்து கொள்ளவும்...
- 10
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேவையான பொரியை எடுத்துக் கொண்டு அதில் ஒரு மேசைக்கரண்டி அரைத்த வெங்காய விழுது, கேரட், நறுக்கிய வெங்காயம், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து தேங்காய் எண்ணெய் வேர்கடலை ஓமப்பொடி அனைத்தையும் நன்கு கலந்து பரிமாறவும்.. இதில் பாசி பயிறு சுண்டல் சேர்த்தாலும் சுவைக்க நன்றாக இருக்கும்... பரிமாறும்போது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும்..
- 11
சுவையான ஸ்னாக் தயார்...
- 12
சிறுவர்களுக்கு கொடுத்தாள் சட்னி விழுதை குறைவாக சேர்த்து பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
-
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
-
-
-
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2#book#வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். sobi dhana -
-
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
சுவையான பொரி சித்ரான்னம்
வித்யாசமான சுவையில் பொரி சித்ரான்னம் செய்யும் முறை. காலை சிற்றுண்டி அல்லது தேனீர் அருந்தும் சமையம் பரிமாற உகந்தது. ஈசி மற்றும் டேஸ்ட்டி. Prasanvibez -
-
-
-
பைனாபிள் மதுரா பச்சடி
பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது Aswani Vishnuprasad -
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
-
-
-
Goldenapron2மசால் பூரி மகாராஷ்டிரா உணவு
மகாராஷ்டிரா உணவுமுறை நிறைய இருக்கு கோலாப்பூர் மசாலா பேல் பூரி பானி பூரி ஆம்லெட் நிறைய உங்க வெண்ண சேர்க்கிறார்கள் சமையலில் சாட் மசால் சாஜிரா காஷ்மீர் மசால் இதனால் உணவு முறையில் நிறைய வண்ணங்கள் உண்டு அசைவத்தை விட சைவம் விரும்பி சாப்பிடுகின்றனர் இப்ப நான் செஞ்சது மசாலா பூரி நல்லா இருந்தது என் உறவுக்காரப் பெண் சொல்லிக்கொடுத்தது மும்பையில் இருக்கின்றனர் Chitra Kumar -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki
#immunityப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar
More Recipes
கமெண்ட்