தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 200 கிராம் கேரட்
  2. 150 கிராம் பீன்ஸ்
  3. 100 கிராம் பட்டாணி
  4. 3உருளைக்கிழங்கு
  5. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  6. 8 தக்காளி (அரைத்த விழுது)
  7. 1 சிறிய துண்டு இஞ்சி
  8. 12 பல் பூண்டு
  9. 4 பச்சை மிளகாய்
  10. 1 ஸ்பூன் சோம்பு
  11. 1 கப் தேங்காய் துருவல்
  12. 15 முந்திரி
  13. 2 கப் தேங்காய் பால்
  14. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. 2 ஸ்பூன் மல்லித்தூள்
  16. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  17. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  18. 1/8 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  19. கல் உப்பு தேவையான அளவு
  20. வறுத்து பொடிக்க:
  21. 3 பட்டை
  22. 3 கிராம்பு
  23. 3 ஏலக்காய்
  24. 1 அன்னாச்சி பூ
  25. 1 மராத்தி மொக்கு
  26. 2பிரியாணி இலை
  27. கல்பாசி சிறிது
  28. ஜாதிபத்திரி சிறிது
  29. 2 ஸ்பூன் நெய்
  30. தாளிக்க:
  31. 6 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  32. 4 டேபிள் ஸ்பூன் நெய்
  33. 1 ஸ்பூன் கடுகு
  34. கறிவேப்பிலை சிறிது
  35. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை நெய் விட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும் இதுவே இதற்கு தேவையான கரம் மசாலா தூள் காய்கறிகளை நறுக்கி கொள்ளவும் பட்டாணி ஐ குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் அரைத்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சோம்பு விழுதை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின் நறுக்கிய காய்கறிகள் பட்டாணி ஆகியவற்றை கழுவி தண்ணீர் வடிகட்டி இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

  6. 6

    பின் தேங்காய் உடன் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும் அதை கொதிக்கும் குழம்பில் ஊற்றி நன்கு கிளறவும்

  7. 7

    பின் எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்க விடவும்

  8. 8

    கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் ப்ளைன் குஸ்கா தேங்காய் பால் குஸ்கா ஆகியவற்றிற்கு ஏற்ற சால்னா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes