ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4#Beetroot#week5
என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
10 பேர்
  1. 400 கி மைதா மாவு
  2. 300 கிராம் சர்க்கரை
  3. 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 230 மில்லி பட்டர் மில்க்
  5. 115 கிராம் பட்டர்
  6. 200கி குகிங் ஆயில்
  7. 2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  8. 3 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்
  9. 1/4 டீஸ்பூன் சால்ட்
  10. 2 முட்டை
  11. 1 டீஸ்பூன் வினிகர்
  12. 1/4 டம்ளர் பால்
  13. பட்டர் ப்ராஸ்டிங் செய்ய
  14. 5 டேபிள் ஸ்பூன் சூடான பால்
  15. 10 டேபிள் ஸ்பூன் பவுடர் சுகர்
  16. 1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  17. 200 கிராம் பட்டர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். சர்க்கரையை பொடி பண்ணவும்.

  2. 2

    பீட்ரூட்டை பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். மைதா மாவு,பேக்கிங் சோடா, உப்பு, கொக்கோ பவுடர் சேர்த்து சலித்து ஒரு பவுலில் வைக்கவும்.

  3. 3

    வேறொரு பௌலில் வெண்ணெய் சேர்த்து ஆறு நிமிடம் நன்றாக அடித்து கிளறி வைக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு 4 நிமிடம் கிளறவும். பிறகு முட்டை சேர்த்து நன்கு அடித்து கிளறவும்

  4. 4

    முட்டை சேர்த்து அடித்து கிளறவும். சிறிது நேரம் கழித்து வினிகர் சேர்க்கவும்.

  5. 5

    பிறகு பீட்ரூட் சாறு,மோர், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும். மைதா மாவு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.

  6. 6

    பிறகு பேக்கிங் ட்ரேயில் கிரீஸ் செய்து கொள்ளவும்.நான் இரண் டு பேன் யூஸ் பண்ணி செய்திருக்கிறேன் உங்களிடம் ஒரே பேன் இருந்தால் அதில் ஊற்றி செட் பண்ணவும். பாதியளவு வருமாறு செய்யவும்.

  7. 7

    குக்கரில் மண் நிரப்பி பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்துள்ளேன். பிறகு பேன் உள்ளே வைத்து மூடி போட்டு 40 நிமிடம் பேக் செய்யவும். கடாயில் மண் நிரப்பி பேன் 30 நிமிடம் பேக் பண்ணவும்.*ஏனென்றால் இது சின்ன பேன் சீக்கிரம் வெந்துவிடும்.

  8. 8

    இப்போது நம் கேக் தயாராகிவிட்டது. பிராஸ்டிங் செய்ய சர்க்கரையை பொடித்து சலித்துக்கொள்ளவும்.சூடான பாலில் சர்க்கரை பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கி ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

  9. 9

    வெண்ணை எடுத்து ஒரு பவுலில் சேர்க்க 7 நிமிடம் நன்றாக கலக்கவும்.பிறகு சுகர் சிரப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக அடித்து கிளறவும். உங்களிடம் பீட்டர் இருந்தால் உபயோகப்படுத்தவும். வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து கிளறவும். உங்களுக்கு விருப்பமான வடிவில் கேக்கின் மேலே பிராஸ்டிங் செய்து கொள்ளலாம்.

  10. 10

    இதைத் செய்ததும் ஃப்ரிட்ஜில் ஒரு அரைமணி நேரம் வைத்து பரிமாறலாம். சுவையான ரெட் வெல்வெட் கேக் ரெடி. செம டேஸ்டாக இருந்தது நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes