அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#pooja
பாலில் செய்யப்படும் அக்காரவடிசல் அம்மன் படையலுக்கு ஏற்றது.

அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)

#pooja
பாலில் செய்யப்படும் அக்காரவடிசல் அம்மன் படையலுக்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
ஆறு பேர்
  1. ஒரு கப்பச்சரிசி
  2. கால் கப்பயத்தம் பருப்பு
  3. 3 கப்வெல்லத் துருவல்
  4. 2 லிட்டர்பால்
  5. ஒரு கப்நெய்
  6. ஆறுஏலக்காய்
  7. 15முந்திரி
  8. 15உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    அடி கனமான பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி பயத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு லிட்டர் பாலை ஊற்றி சூடு பண்ணவும். பச்சரிசியை நன்கு களைந்து வடிகட்டி கொதிக்கும் பாலில் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

  3. 3

    அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் மீதியிருக்கும் பாலை சேர்த்து அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். வெல்லத் துருவலை கால் கப் நீரில் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

  4. 4

    அரிசி நன்கு குழைந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லப்பாகை சேர்த்து கிளறவும். 3 டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து விட்டு மீதி இருக்கும் நெய்யை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்

  5. 5

    ஏலம் பொடித்துப் போட்டு கிளறவும். மீதி இருக்கும் நெய்யில் முந்திரியையும் உலர் திராட்சையும் வறுத்து தூவிஅலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes