அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# flour1
நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பேர்
  1. 2 கப் விதை நீக்கிய பேரிச்சம்பழம்
  2. 2 கப் கோதுமை மாவு
  3. 1 கப் சூடான பால்
  4. 3/4 கப் எண்ணெய்
  5. 1/4 கப் தயிர்
  6. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1/4 டீஸ்பூன் உப்பு
  9. 1/2 கப் பால்
  10. 1/4 டீஸ்பூன் நட்மக் பவுடர்
  11. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  12. முந்திரி பாதாம் தேவையான அளவு
  13. அலங்கரிக்க பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக முன்கூட்டியே எடுத்து வைக்கவும்.

  2. 2

    பேரிச்சம்பழத்தில் சூடான பால் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    பிறகு அதை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இப்போது குக்கரை அடுப்பில் வைத்து மண் நிரப்பி பத்து நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டுசூடு பண்ணவும்.

  4. 4

    கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு அனைத்தையும் சலித்துக்கொள்ளவும். ஒரு பௌலில் தயிர், பால்,எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் மாவு வகைகளை சேர்த்து மென்மையாக கலந்து கொள்ளவும். அடித்து கிளறினால் கேக் கடினமாக ஆகிவிடும். சற்று தளர்வாக இருக்குமாறு பார்க்கவும். கன்சிஸ்டன்ஸி கெட்டியாக இருந்தால் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    பிறகு முந்திரி பாதாம் தூள், எஸன்ஸ், நட்மெக் பவுடர் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.

  6. 6

    ப்ளேட் ஆயில் கிரீஸ் பண்ணவும். மாவு கலவையை சேர்க்கவும். அலங்கரிக்க முந்திரி பாதம் பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்.

  7. 7

    குக்கரில் பேனை வைத்து மூடி போட்டு குறைந்த முதல் மிதமான தீயில் வைத்து 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

  8. 8

    ஒரு பத்து நிமிடம் கழித்து அன்மோல்ட் செய்யவும். பரிமாறும் தட்டுக்கு மாற்றி பரிமாறலாம். மிகவும் சுவையான ஹெல்தியான கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes