கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#flour1 #GA4 #oats #week7
நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 -6 பேர்
  1. 1 கப் ஓட்ஸ்
  2. 3/4 கப்கோதுமை மாவு
  3. 1/4 கப் தண்ணீர்
  4. 4 டேபிள் ஸ்பூன் நெய்
  5. சிறிதளவுஉப்பு
  6. தேவையான அளவுபாதம் முந்திரி தூள்
  7. 3/4 கப் நாட்டுச் சர்க்கரை
  8. 1/3 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/2 டீஸ்பூன் சின்னமொன் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் நாட்டுச் சர்க்கரையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி தண்ணீர் கலந்து கரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு பவுலில் கோதுமை மாவு நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் பட்டை தூள், சிறிது உப்பு,பேக்கிங் பவுடர் சேர்க்கவும். கைகளினால் நன்றாக கலந்து வைக்கவும்.

  3. 3

    கைகளில் லேசாக நெய் தடவிக்கொண்டு மாவு கலவையை உருட்டி இரண்டு கைகளினால் சேர்த்து அழுத்தி வைக்கவும். சற்று கனமாகத் தட்டவும். சுற்றிலும் சற்று வெடிப்பு வரத்தான் செய்யும் பரவாயில்லை. அப்போதுதான் கிரிஸ்பியாக வரும். எல்லாம் மாவு வகைகளை அதே மாதிரி செய்து வைக்கவும்.

  4. 4

    இப்போது அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தட்டை வைத்து மூடி போட்டு 5 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும். பிறகு குக்கீஸ் மீது பாதாம் முந்திரி தூள் பரப்பி ஒரு அழுத்தம் கொடுத்து பிளேட்டில் வைக்கும். மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் வரை வைக்கவும். அரை மணி நேரம் ஆறவிட்டு பிறகு பரிமாறலாம். கிரிஸ்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes