பன்னீர் கிரேவி

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week6
#paneer
சப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம்.

பன்னீர் கிரேவி

#GA4
#week6
#paneer
சப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 200 கிராம் பன்னீர்
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 ஸ்பூன் மல்லித் தூள்
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 2 ஸ்பூன் சர்க்கரை
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி இலை சிறிதளவு
  12. 1 ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தக்காளி வெங்காயம் ஆகியவற்றை பெறுவதாக நறுக்கி மிக்சி ஜாரில் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பன்னீரை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்க்கவும்.

  3. 3

    சோம்பு பொரிந்தவுடன் அரைத்து வைத்த வெங்காய பேஸ்டை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். சிறிது வதங்கிய பின்னர் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் கரம் மசாலா தனியாத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    எல்லா மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்த பின்னர் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்க்கவும் சேர்க்கவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 7 முதல் 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.

  5. 5

    இறுதியாக சர்க்கரை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்துவிடவும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes