கேரட் குழிப்பணியாரம் (Carrot kuzhipaniyaram recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#ilovecooking
பணியாரம் செய்வதில் கேரட்டை சேர்ப்பதனால் தேவையான விட்டமின் சத்துக்கள் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தம்.

கேரட் குழிப்பணியாரம் (Carrot kuzhipaniyaram recipe in tamil)

#ilovecooking
பணியாரம் செய்வதில் கேரட்டை சேர்ப்பதனால் தேவையான விட்டமின் சத்துக்கள் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 4பெரிய கேரட்
  2. 2பெரிய வெங்காயம்
  3. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  4. தாளிப்பதற்கு
  5. 1 ஸ்பூன்கடுகு
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. 1 ஸ்பூன் வெள்ளை உளுந்து

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கேரட்டைத் துருவி எடுத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுந்து இரண்டும் சிவந்தவுடன் கருவேப்பிள்ளை மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கி மீதமுள்ள ஆப்ப மாவு அல்லது இட்லி மாவில் கூட சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

  3. 3

    பணியார சட்டியை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் கால் ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு இந்த மாவினை ஊற்றி இரண்டு புறமும் நன்றாக சிவந்தவுடன் திருப்பி போட்டு வேக வைக்கவும். பின்னர் அலங்கரித்து பரிமாறவும். மிளகாய்ச் சட்னி இதற்கு பொருத்தமான தாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes