அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)

#kids3
கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3
கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை ஆய்ந்து அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் தோலுரித்து வைத்துக் கொள்ளவும். 5 பல் பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை நெத்து பதமாக வேகவைத்து கொள்ளவும். சாதம் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் சீரகம், வரகொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டுப் பல், சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு கீரையை சேர்த்து வதக்கவும்.கீரை லேசாக வதங்கிய பின் பாசி பருப்பு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து கீரையை வேக விடவும். பின் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். பின்பு கீரையை ஆறவைக்கவும்.
- 3
ஆறி விட்ட கீரையை தூள் உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு வரமிளகாய், கருவேபபிலை தாளித்துக் கொள்ளவும். ஆற வைத்த சாதத்தில் கீரை விழுது நெய், தாளித்த பொருட்கள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். உப்பு தேவை என்றால் லேசாக சேர்த்துக் கொள்ளவும்.
- 4
சுவையான கீரை சாதம் தயார். அரைத்த கீரை விழுதின் மீதியை தனியாக எடுத்து வைத்துக் கொண்டால் தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
கீரை சாதம்
#book #lockdownவீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம். Meena Ramesh -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety Lakshmi Sridharan Ph D -
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
#cookwithmilk நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம் Poongothai N -
-
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
-
வடகம்
#leftoverஅப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh
More Recipes
- குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)
- கொத்தமல்லி இலை சாதம் (Kothamalli ilai satham recipe in tamil)
- கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
- பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
- எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
கமெண்ட் (2)