மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)

மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து கொள்ளவும். பருப்பை வேக வைப்பதற்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இதனோடு தக்காளி, மற்றும் காய்கறிகள், பூண்டை சேர்க்கவும். கூடவே அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்.பருப்பு வேகவைக்கும் சமயத்தில் விளக்கெண்ணெய் சேர்ப்பதால் பருப்பு நன்கு மலர்ந்து மணமாக இருக்கும்.
- 3
சாம்பார் பொடி தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் இன்றி மிதமான தீயில் நன்கு வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.
- 4
ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.
- 5
அதன்பின் சின்ன வெங்காயத்தை முழுதாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 6
கூடவே அரைத்த சாம்பார் பொடியிலிருந்து 1.5 மேஜைக்கரண்டி சேர்க்கவும். வெந்த பருப்பு மற்றும் காய்கறிகளை கரண்டியால் லேசாக மசித்துக் கொண்டு மண்சட்டியில் சேர்த்துக்கொள்ளவும்.
- 7
மினி இட்லிக்கான சாம்பார் சிறிது நீர்க்க இருக்க வேண்டும் எனவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூடவே புளிக் கரைசலையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறுதியில் வெல்லம் சேர்த்து மல்லி இலைகளை தூவவும்.
- 8
இப்போது மினி இட்லி தட்டில் நெய் தடவிக் கொள்ளவும். நெய் தடவுவதால் இட்லி சாம்பாருடன் கலக்கும்போது நல்ல மணமாக இருக்கும். சிறிய ஸ்பூன் கொண்டு மாவினை ஊற்றி கொள்ளவும். இதனை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து இட்லிகளை தயார் செய்து கொள்ளவும். மினி இட்லி தட்டு இல்லை என்றால் பெரிய இட்லிகளைப் போட்டு அதனை சதுரமாக வெட்டிக் கொள்ளலாம்.
- 9
தயார் செய்த இட்லிகளை பரிமாறும் கிண்ணத்தில் சேர்த்து அதன்மேல் தேவையான அளவு சாம்பார் ஊற்றி சிறிது நெய் சேர்த்து மல்லி இலைகளை தூவி பரிமாறலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் போனதும் கேட்டு வாங்கி சாப்பிடுவது மினி இட்லி சாம்பார் #hotel Sundari Mani -
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)
#hotel உணவகத்திற்கு செல்லும் பொழுது என் முதல் தேர்வு மினி இட்லிIlavarasi
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
-
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். Anus Cooking -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
வெரைட்டி மினி ஊத்தப்பம் (Verity mini oothappam recipe in tamil)
#familyஎன் குடும்பத்தினருக்கு வெரைட்டியான மினி உத்தப்பம் மிகவும் பிடிக்கும். சட்னி அரைக்காத அல்லது இல்லாத தினங்களில் இதை கொடுத்தால் சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
-
மினி ஊத்தாப்பம் (Mini uthappam)
ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#breakfast Renukabala -
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh
கமெண்ட் (2)