அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)

#kids3
அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன்.
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3
அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு டம்ளர் இட்லி அரிசி, ஒரு டம்ளர் துவரம்பருப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.(என்னால் அன்றே ஆட்ட முடியாததால் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் காலை ஆட்டினேன்.அதனால் அடை துண்டுகள் மிகவும் மிருதுவாக இருந்தது.) இந்த இரண்டுடன் 10 வர மிளகாய் துருவிய அரை மூடித் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும்.தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த மாவை நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இட்லி பானையில் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும். அதில் ஒரு கப் வைத்து அந்த கப்பில் கொஞ்சம் தண்ணீர் வைக்கவும். ஒரு தட்டில் எண்ணையை நன்கு தடவி ஆட்டிய மாவை கெட்டியாக பரத்தி விடவும்.இதை தண்ணீர் வைத்த கப்பின் மேல் வைத்து இட்லி அண்டாவை மூடி வைக்கவும். இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடம் வரை வேக விடவும். பிறகு வெந்துவிட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். கத்திக்கொண்டு துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
- 3
அடை ஆறியவுடன் தட்டை கவிழ்த்து துண்டுகளை தனியாக எடுத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் பொடியாக அரிந்த பூண்டு பல் மற்றும் இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்பு குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 4
ஓரளவு நிறம் மாறி வதங்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ், வினிகர் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அதை துண்டுகளை சேர்த்து கலந்து சாஸ் சுவை ஏற சிறிது நேரம் மூடி வைக்கவும். சுவையான குழந்தைகள் விரும்பும் அடை மஞ்சூரியன் ரெடி. லஞ்ச் பாக்ஸில் சூடாக வைத்து மேலே சிறிது தக்காளி சாஸ் ஊற்றி தரவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
கமெண்ட் (3)