கோவைக்காய் ரைஸ்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

Kids 3
குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 கப் உதிராக வடித்த சாதம்
  2. 200 கிராம் கோவைக்காய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. சிறியலெமன் அளவு புளி
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  11. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  12. 1_1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1/8 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  14. 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  15. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  16. 1/2 கப் எண்ணெய்
  17. 6 டேபிள் ஸ்பூன் நெய்
  18. 1 ஸ்பூன் கடுகு
  19. 1 ஸ்பூன் சீரகம்
  20. 1/2 ஸ்பூன் சோம்பு
  21. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  22. 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  23. 1 கைப்பிடி அளவு வேர்க்கடலை
  24. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    கோவைக்காய் ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும் புளியை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கூட 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய கோவைக்காய் சேர்த்து வதக்கவும் 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்

  4. 4

    பின் திறந்து காய் சற்று நிறம் மாறி இருக்கும் (முக்கியமா இதை தண்ணீர் ஊற்றி வேக வைக்க கூடாது) காய் வதக்க மட்டும் தான் நேரமும் பொறுமையும் தேவை பின் கட கடவென்று ரெடி ஆகி விடும் பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் மீண்டும் 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும் பின் சற்று வதங்கியதும் தக்காளி மற்றும் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்க்கவும்

  6. 6

    பின் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும் இப்போது மீண்டும் 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறவும் பின் மீண்டும் 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்

  7. 7

    பின் திறந்து ஒரு முறை நன்றாக கிளறி விடவும் பின் புளிக்கரைசல் ஐ ஊற்றி நன்கு கிளறவும் பின் எல்லாம் கொதித்து தொக்கு மாதிரி வரும் வரை மூடி வைக்கவும்

  8. 8

    பின் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும் பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறவும்

  9. 9

    சுவையான ஆரோக்கியமான கோவைக்காய் ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes