மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்
சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.
#worldeggchallenge

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பேர்
  1. 2முட்டை
  2. 200 கிராம் நறுக்கிய காளான்
  3. 1வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு
  6. 2பச்சை மிளகாய்
  7. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. 1/2 டீஸ்பூன் சோம்பு
  9. 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  10. 1/2 டீஸ்பூன் மஞசள்தூள்
  11. 1 டீஸ்பூன் மிளாய்த்தூள்
  12. 1/2 டீஸ்பூன் சிக்கன் மசாலாத்தூள்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மல்லி, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முட்டை, தக்காளி,வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

  2. 2

    காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி,பின் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, நறுக்கிய காளான், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு
    வதக்கி மூடி வைக்கவும்.(காளானில் தண்ணீர் வரும்)

  4. 4

    ஐந்து நிமிங்களுக்கு பிறகு ஒரு முறை கலந்து விட்டு, தனியாத்தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் முட்டையை உடைத்து ஊற்றவும். நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

  6. 6

    முட்டை நன்கு கலந்தவுடன் சிக்கன் மசாலாத்தூள் கலந்து இரண்டு, நிமிங்கள் வதக்கி பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான காளான் முட்டை மசாலா தயார்.

  7. 7

    இப்போது எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும். இதோ சுவையான மஷ்ரூம், எக் மசாலா சுவைக்கத்தயார்.

  8. 8

    இந்த மஷ்ரூம், எக் மசாலாவை சாதத்துடன் குழந்தைகளுக்கு சிறிது நெய் கலந்து கொடுக்கலாம். அனைவரும் சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes