பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பரிமாறுவது
  1. கேரமல் செய்ய:
  2. 1/4 கப் சர்க்கரை
  3. 2 ஸ்பூன் தண்ணீர்
  4. புட்டிங் செய்ய:
  5. 2 கப் காய்ச்சிய பால்
  6. 1/4 கப் சர்க்கரை
  7. 1/4 கப் மில்க் மெயின்ட்
  8. 3 முட்டை
  9. 1 ஸ்பூன் பைனாப்பிள் எசென்ஸ்
  10. 4 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  11. 25முந்திரி
  12. 25 பாதாம்
  13. 8ஸ்லைஸ் பைனாப்பிள் ரிங்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பைனாப்பிள் ரிங் ஐ ட்ரேயில் அடுக்கவும் பின் கேரமல் செய்ய கொடுத்துள்ள சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து உருகி தேன் கலர் வந்ததும் ரெடியா உள்ள பைனாப்பிள் மேல் ஊற்றவும் பின் மோல்டை சுழற்றவும்

  2. 2

    பின் செட் ஆக பதினைந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும், முந்திரி மற்றும் பாதாமை வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் பாதாமை தோல் உரித்து எடுத்து வைக்கவும்

  3. 3

    புட்டிங் செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த முந்திரி பாதாம் சேர்த்து நன்கு அரைக்கவும் பின் பாலை சிறிது ஊற்றி நன்கு வெண்ணெய் போல் அரைத்து எடுக்கவும்

  4. 4

    பின் அதனுடன் முட்டை, சர்க்கரை, மில்க்மெயின்ட்,பால் பவுடர், பைனாப்பிள் எசென்ஸ்,மீதமுள்ள பால்,எல்லாம் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  5. 5

    பின் அதை செட் ஆன பைனாப்பிள் கேரமல் மேல் ஊற்றவும்

  6. 6

    பின் அலுமினிய பாயில் கொண்டு மூடி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஒரு ஸ்டேண்ட் வைத்து அதன் மேல் இந்த புட்டிங் பாத்திரத்தை வைத்து குக்கர் மூடியில் விசில் மற்றும் கேஷ்கட் ஐ எடுத்து விட்டு குக்கரை மூடி ஸ்லோ ப்ளேமில் 35_40 நிமிடங்கள் வரை வேகவிடவும்

  7. 7

    பின் எடுத்து பிரிட்ஜில் குறைந்தது 3 மணி நேரம் வரை வைத்து எடுத்து கவிழ்க்கவும் சுவையான பைனாப்பிள் கேரமல் புட்டிங் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes