முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3பரிமாறுவது
  1. 1கப்முந்திரி பருப்பு
  2. 1\2கப்சீனி
  3. 1\4கப்தண்ணீர்
  4. 1\2கப்நெய்
  5. 1பின்ச்சிகப்பு ஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முந்திரிப்பருப்பை மிக்ஸி ஜாரில் எடுத்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் சீனியை சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை வைத்திருக்கவும்

  3. 3

    சரியாக ஒரு கம்பிப் பதம் வந்ததும் பொடித்த முந்திரியை சேர்த்து கிளறி கிளறி விடவும்

  4. 4

    நன்கு கட்டி இல்லாமல் ஒரு சேர கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது கெட்டி பதமாக வரும் வரை கிளறிக் கிளறி விடவும்

  5. 5

    நன்கு சுருண்டு ஒட்டாமல் வந்ததும் சுற்றிலும் பாதி அளவு நெய் விட்டு நன்கு சுருண்டு கிளறி விடவும், பிறகு சிகப்பு ஃபுட் கலரை சேர்க்கவும்

  6. 6

    மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes