மிளகு பட்டன் தட்டை (Milagu button thattai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 11/2 கப் அரிசி மாவு
  2. 3டேபிள் ஸ்பூன் உளுத்தம் மாவு
  3. 1டேபிள் ஸ்பூன் வெண்ணை
  4. 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 2ஸ்பூன் மிளகு தூள்
  6. 2ஸ்பூன் ஊறவைத்த கடலை பருப்பு
  7. எண்ணெய் -பொரிப்பதற்கு
  8. பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    பதப்படுத்தி லேசாக் வறுத்த அரிசி மாவுடன், உளுத்தமாவு,(வெறும் சட்டியில் வறுத்து அரை த்த) வெண்ணை,தேங்காய், மிளகுத்தூள், உப்பு, பெருங்காயம், கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துக்கவும்.

  2. 2

    அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு சாப்ட் மாவு பிசைந்து வைத்துக்கவும்.. வெண்ணை வேண்டாம் நினைத்தால் சூடான எண்ணெய் சேர் த்துக்கவும்

  3. 3

    மாவை சிறுது எடுத்து சின்ன சின்ன தட்டையாக இட்டுவெச்சு க்கவும்.

  4. 4

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி ஹை சூட்டில் சூடானதும், மிதமான சூட்டில் வைத்து ஒரோ தட்டையாக எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கவும் திருப்பி போட்டு ஓசை நின்றதும் எடுத்து விடவும்.. ரொம்ப சிவக்க வேண்டாம்..

  5. 5

    மிளகு சுவையுடன் கூடிய மொறு மொறு தட்டை சாப்பிட தயார்.. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.. எல்லோருக்கும் பிடித்த டீ டைம் ஸ்னாக்.. அதுவும் இந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி மிளகு சேர்த்து செய்யும்போது உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்ததாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes