திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி

suba somasundaram
suba somasundaram @cook_26467404
Madurai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு ஸ்பூன் தனியா
  2. சிறுதுண்டு பட்டை
  3. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. கிராம்பு
  5. ஒரு ஸ்பூன் மிளகு
  6. 5 ஏலக்காய்
  7. பிரியாணி இலை
  8. பச்சை மிளகாய்
  9. நெய்
  10. ரீபைண்ட் ஆயில்
  11. நட்சத்திர பட்டை
  12. ஒரு ஸ்பூன் சோம்பு
  13. ஒரு ஸ்பூன் சீரகம்
  14. அரைக்கிலோ சீரக சம்பா
  15. தண்ணீர்
  16. ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம்
  17. ஒரு கிலோ சிக்கன்
  18. ஒரு கப் தயிர்
  19. உப்பு
  20. ஒரு தக்காளி
  21. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் கிராம்பு ஏலக்காய் பட்டை அண்ணாசிலை ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு தனியா மிளகு நட்சத்திர பட்டை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு தக்காளிசின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும் பின்பு அதில் அரைத்து வைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளவும் அதன் பிறகு அரைத்து வைத்த பிரியாணி மசாலாவையும் அதனோடு ஒரு ஸ்பூன் மிளகாய் தூளையும்சேர்த்து வதக்கவும் குறிப்பு பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும் பின்பு அதில் மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்த சிக்கனை சேர்த்து கொள்ளவும்

  3. 3

    பின்பு அதில் ஒரு கப் தயிர் உப்பு சேர்த்துக் கொள்ளவும் அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் அதன் பிறகு அரை மணி நேரம் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கொள்ளவும் அதனோடு ஒரு கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்குறிப்பு ஒரு டம்ளர் சீரக சம்பா அரிசி ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும் ஒரு கொதி வந்தவுடன் தட்டை வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும் அதன்பிறகு கேஸை அணைத்துவிட்டு ஒரு பெரிய கடாய் அல்லது கனமான பாத்திரத்தை மேலே வைத்து தம் போடவும் சுவை மிகு பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

suba somasundaram
suba somasundaram @cook_26467404
அன்று
Madurai

Similar Recipes