சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

சிக்கன் பார்பிக்யூ (Chicken BBQ)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. சிக்கன் துண்டுகள் 250g,
  2. எண்ணெய் தேவையான அளவு,
  3. தயிர்,
  4. இஞ்சி பூண்டு விழுது 1.5 டேபிள்ஸ்பூன்,
  5. கான்ப்ளவர் பவுடர் 1 டேபிள்ஸ்பூன்,
  6. மிளகாய்த்தூள் 1.5 டேபிள்ஸ்பூன்,
  7. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
  8. தக்காளி 2,
  9. டொமேடோ கெட்சப் சாஸ் 2 டேபிள்ஸ்பூன்,
  10. சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்,
  11. தேன் 1 டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கனை சுத்தம் செய்து தயிர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கான்பிளவர் பவுடர், மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பிறகு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிக்கன் 65 போல் வறுத்து எடுக்கவும்.

  3. 3

    பிறகு 2 தக்காளி பழத்தை நன்றாக அரைத்து, ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் 1.5 ஸ்பூன் டொமேட்டோ சாஸ் கெட்சப், 1ஸ்பூன் சோயா சாஸ் மற்றும் 1ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆகும் வரை விடவும்.

  4. 4

    பிறகு வறுத்து வைத்துள்ள சிக்கன் 65 துண்டுகளை, இந்த கலவையில் சேர்த்து நன்றாக சேரும் வரை 15 நிமிடங்களுக்கு வைக்கவும்.

  5. 5

    பிறகு அந்த சிக்கன் துண்டுகளை நீளமான ஊசியில் குத்தி லேசாக நெருப்பில் காட்டவும். சுவையான சிக்கன் BBQ தயார் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes