பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட் மால்ட் உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தரமான நாட்டு சர்க்கரையை உபயோகிக்கவும்.
- 2
ஒரு பேனை சூடு செய்து முந்திரி பாதாம் மற்றும் ஏலக்காயை சிறு தீயில் வறுத்து எடுக்கவும். இதனை ஆறிய பின் பொடித்துக் கொள்ளவும்.
- 3
அடி கனமான இரும்பு கடாய் அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நறுக்கிய பீட்ரூட்டை விழுதாக அரைத்து சேர்க்கவும். அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே நாட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை உருகிய பின் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 4
மூடி போட்டு சிறு தீயில் சுண்ட விடவும். இடையிடையே கிளறவேண்டும். நன்கு வத்தி அல்வா பதத்திற்கு வந்த பின், கரண்டியால் பிரித்தால் இரண்டு பக்கமும் சேரக்கூடாது.இந்தப் பதத்தில் அரைத்த முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கிளறவும். கிளறிய உடன் இதன் நிறம் மாறிவிடும்.
- 5
இதனை 5 நிமிடங்கள் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். மின்விசிறியை அதிகமான ஸ்பீடில் வைத்து அதற்குக் கீழ் இந்த பாத்திரத்தை வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். காற்று நன்றாக இதில் படும் பொழுது பீட்ரூட் இறுக ஆரம்பிக்கும். ஏறக்குறைய 40 முதல் 60 நிமிடங்கள் ஆகலாம். சிறிது சிறிதாக இறுகி பின் பூஸ்ட் போன்ற பொடியின் தன்மையில் மாறிவிடும்.
- 6
அவ்வளவுதான் நம்முடைய பீட்ரூட் மால்ட் பொடி தயார். இதனை பெரிய ஓட்டை கொண்ட சல்லடையில் சலித்துக் கொள்ளலாம். சலித்த பின்வரும் கட்டிகளை மிக்ஸியில் அரைத்து மீண்டும் சலித்துக் கொள்ளலாம். இப்படித் தயார் செய்த பொடியை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகிக்கலாம்.
- 7
குறிப்பு: இரும்புப் பாத்திரத்தில் இதனை தயார் செய்வதனால் மேலும் இரும்பு சத்து கிடைக்கும்.இதனை சூடான தண்ணீர் அல்லது சூடான பாலில் கலந்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். பீட்ரூட்டின் சுவை சிறிதும் தெரியவராது. பூஸ்ட், போன்விட்டா போன்ற பொடிகளின் சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி குடிப்பர். உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கும்,மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் பொடி பால் (Beetroot podi paal recipe in tamil)


பூண்டு பொடி ((Garlic Powder)) (Poondu podi recipe in tamil)


ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)


பீட்ரூட் வடை


பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/


ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)


ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி


எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)


பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)


பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)


பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)


நட்டீ பீட்ரூட் சாண்ட்விச்


பீட்ரூட் அல்வா


ரசம் பொடி (Rasam podi recipe in tamil)


பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)


பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


திடீர் சட்னி பொடி (Chutney podi recipe in tamil)


பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)


வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)


பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot Halwa)


பீட்ரூட் சூப்


பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)


தோசை பொடி(Dosai podi recipe in tamil)


பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)


பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)

கமெண்ட்