காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)

Lavanya jagan
Lavanya jagan @thirumadaipalli_2021

நண்பர்களே..
சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம்.

காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)

நண்பர்களே..
சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப்இட்லி அரிசி
  2. 1 ௧ப்உளுந்து
  3. 1 /4 ஸ்பூன்வெந்தயம்
  4. 1 ஸ்பூன்சுக்கு பொடி
  5. 1 /4 ஸ்பூன்பெருங்காயம்
  6. 2 ஸ்பூன்நெய்
  7. 2 ஸ்பூன்நல்லெணெய்
  8. முந்திரி பருப்பு - தேவையான அளவு
  9. மிளகு சீராக பொடி (கொரகொரப்பாக அரைத்ததது)- 3 ஸ்பூன்
  10. கருவேப்பில்லை - சிறிது
  11. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசி,உளுந்து,வெந்தயம் எல்லாவற்றயும் ஒன்றாக 8 மணிநேரம் ஊறவைக்கவும்.கொரகொரப்பாக மிக்ஸியில் 20 நிமிடங்களுக்கு மிகாமல் அரைத்துக்கொள்ளவும்.பின் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  2. 2

    புளித்த மாவில் உப்பு,சுக்குப்பொடி,பெருங்காயம்,கறிவேப்பிலே, நல்லெண்ணெய், நெய்யில் வறுத்த முந்திரி எல்லாவற்றயும் சேர்க்கவும்.

  3. 3

    டம்பளரில் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவி 3 /4 வரை மாவை சேர்க்கவும். வழக்கம் போல் இட்லி குக்கர்ரில் வைக்கவும்.

  4. 4

    டூத்பிக்கை உபயோகித்து வெந்து விட்டதா என்று சரிபார்க்கவும்.இது வழக்கமான இட்லியைவிட கூடுதல் நேரம் பிடிக்கும் (15 முதல் 20 நிமிடங்கள் ஆகலாம்)

  5. 5

    கத்தியின் உதவியுடன் டம்லரின் ஓரங்களை எடுத்து தட்டில் கொட்டி பெரிய துண்டுகள் ஆக்கிக்கொள்ளவும்.

  6. 6

    மிளகாய் பொடி மற்றும் தக்காளி தொக்குடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lavanya jagan
Lavanya jagan @thirumadaipalli_2021
அன்று

Similar Recipes