வால்நட் பட்டர் மசாலா🥘🥘😋😋🤤🤤 (Walnut butter masala recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 1/2 கப் வால்நட்
  2. 4 ஸ்பூன் பட்டர்
  3. 2 வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. 1 துண்டு பட்டை
  9. 2 கிராம்பு
  10. 1ஏலக்காய்
  11. 1/2 ஸ்பூன் சோம்பு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 1 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பட்டர் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து,வெட்டிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். அதில் வால்நட்டையும் சேர்த்து, வதங்கிய பின் தக்காளியை சேர்த்து கிளறவும்.

  2. 2

    அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தக்காளி வதங்கும் வரை கிளறி, ஆற விட வேண்டும்.

  3. 3

    ஆறியபின் அதை மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து, பட்டர் சேர்த்து, அரைத்த விழுதை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது வால்நட்டை சிறிதளவு சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். மல்லி இலை தூவி, நான் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.🥘🥘😋😋🤤🤤

  4. 4

    வால்நட்டை குழந்தைகள் சாப்பிட கஷ்டப்படுவார்கள்.ஆனால் வால்நட் உடலுக்கு நல்லது. இப்படி செய்து கொடுத்தால் சுவையாக இருக்கும் வால்நட்டை அரைத்து மட்டும் சேர்த்தாலே மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes