புளியோதரை

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
5நபர்கள்
  1. 1கப் கரைத்த புளி
  2. 3காய்ந்த மிளகாய்
  3. 1ஸ்பூன் மல்லி
  4. 2ஸ்பூன் கள்ள பருப்பு
  5. 1/4ஸ்பூன் வெந்தயம்
  6. 1துண்டு பெருங்காயம்
  7. 2ஸ்பூன் எள்
  8. தாளிக்க:
  9. 1ஸ்பூன் கடுகு
  10. 1ஸ்பூன் கள்ள பருப்பு
  11. 1ஸ்பூன் உளுந்து
  12. 4ஸ்பூன் கடலை
  13. 3கொத்து கருவேப்பில்லை
  14. 2காய்ந்த மிளகாய்
  15. 1துண்டு வெல்லம்
  16. உப்பு
  17. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் மிளகாய், மல்லி, வெந்தயம், கள்ள பருப்பு, எள் சேர்த்து பொரியும் வரை வறுக்கவும்.

  2. 2

    அதே வாணலியில் ஆயில் விட்டு, பெருங்காயம் போட்டு வறுக்கவும். இவை அனைத்தையும் மிக்சியில் பொடி பண்ணவும்.

  3. 3

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு, கடுகு, மிளகாய், கருவேப்பில்லை, உளுந்து, கடலை, கள்ளபருப்பு போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு அதில் கரைத்த புளி ஊற்றி, உப்பு, வெல்லம் சேர்க்கவும். இதை நன்கு கொதிக்கவிடவும்.

  5. 5

    புளி நன்கு கொதித்து வற்றிய பிறகு அரைத்த பொடியை சேர்க்கவும். இது நன்கு கொதித்து ஆயில் தனியே வரும்.

  6. 6

    இதை இடை இடையே கிளறி விடவும். கெட்டியானதும் இறக்கவும். புளி சாரு ரெடி.

  7. 7

    ஒரு குக்கரில் சாதம் வைக்கவும்.

  8. 8

    ஒரு பாத்திரத்தில் சாதம், புளிசாரு, நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  9. 9

    இப்போது புளியோதரை ரெடி, நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes