தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 நபர்கள்
  1. அரை கிலோ சிக்கன்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 15 சின்னவெங்காயம்
  6. 2வர மிளகாய்
  7. 2 ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது
  8. 1முட்டை
  9. 2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  10. ஒரு ஸ்பூன்அரிசி மாவு
  11. ஒரு ஸ்பூன்கான்பிளவர் மாவு
  12. சிறிதளவுமஞ்சள்தூள்
  13. 1/2 ஸ்பூன்மல்லித்தூள்
  14. கால்ஸ்பூன்சீரகத்தூள்
  15. கால் ஸ்பூன்மிளகு தூள்
  16. பட்டை சிறிதளவு
  17. 2கிராம்பு
  18. 2ஏலக்காய்
  19. ஒரு ஸ்பூன்சோம்பு
  20. ஒரு ஸ்பூன்கரம் மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    முட்டை இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், அரிசி மாவு கான்பிளவர் மாவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,கரம் மசாலாத்தூள் பாதிசேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை பிரியாணி இலை கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், வரமிளகாய் வெங்காயம், சின்ன வெங்காயம்,வதங்கியவுடன் இஞ்சி பூண்டு 1 ஸ்பூன் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்

  5. 5

    பிறகு தக்காளியை போட்டு நன்றாக வதங்கியவுடன் மிளகாய்த்தூள்1 மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    வறுத்து வைத்த சிக்கனை போடவும்

  7. 7

    நன்றாக சுருள சுருளக் கிளறவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்

  8. 8

    சுவையான சிக்கன் வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes