கடலைக்கறி

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்....

கடலைக்கறி

#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1கப் வேக வைத்த கொண்டை கடலை
  2. 3/4 கப் தேங்காய்
  3. 6 வரமிளகாய் (காரத்துக்கேர்ப்ப எடுத்துக்கவும்)
  4. 2ஸ்பூன் வர கொத்தமல்லி
  5. பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு தேவைக்கு
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. ஒரு துண்டு இஞ்சி
  8. 2 பல் பூண்டு
  9. 1பொடியா நறுக்கின வெங்காயம்
  10. 1தக்காளி பொடியாக நறுக்கினது
  11. 2 ஸ்பூன் தாளிக்க - தேங்காய் எண்ணெய்
  12. 1ஸ்பூன் கடுகு, கருவேப்பிலை,

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் ஸ்டவ்வில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு ஏலக்காய் சேர்த்து வறுத்துக்கவும்

  2. 2

    அத்துடன் வரமல்லி, வர மிளகாய், பூண்டு தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு சிவக்க வறுத்து, கடைசியாக இஞ்சி சேர்த்து ஒரு வாட்டி கிளறி ஸ்டவ் ஆப் செய்து வேறொரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

  3. 3

    ஆறினதும் மிக்ஸியில் நன்கு பொடி செய்த பிறகு கடலை வேக வைத்த தண்ணி சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கவும்.

  4. 4

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மஞ்ச்ள்த்தூள் சேர்த்து நன்கு வதககி தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து பச்சமணம் போக கொதிக்க விடவும்.

  6. 6

    நன்கு கொதித்ததும் வேகவைத்து வெச்சிருக்கும் கொண்டைக்கடலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்.. சுவைமிக்க கடலைக்கறி தயார்... இதை புட்டு, ஆப்பம், சப்பாத்தி, இடியாப்பமத்துக்கு தொட்டு சாப்பிட மிக அருமையான ருசியுடன் இருக்கும்...குறிப்பு - தேங்காய் எண்ணையில் தாளிப்பு செய்தால் தான் சுவை நன்றாக் இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes