சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
week 6
சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. 2சிறிய அளவு பட்டை
  5. 3கிராம்பு
  6. 3ஏலக்காய்
  7. 2பிரியாணி இலை
  8. 1/2 கப் துருவிய தேங்காய்
  9. 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  10. 1 டேபிள் ஸ்பூன் கச கச
  11. 10 முந்திரிப் பருப்பு
  12. 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி‌ மிளகாய் தூள்
  15. 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  16. 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  17. 1 டேபிள் ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  18. 11/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  19. 4பச்சை மிளகாய்
  20. 10கருவேப்பில்லை இலைகள்
  21. 1கையளவு புதினா இலைகள்
  22. 1கையளவு கொத்தமல்லித்தழை
  23. தேவையான அளவு உப்பு
  24. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரை கப் துருவிய தேங்காயுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா 10 முந்திரி பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இரண்டு சிறிய துண்டு பட்டை 3 கிராம்பு 3 ஏலக்காய் 2 பிரியாணி இலை சேர்த்து பொரிய விட வேண்டும்...

  4. 4

    பிறகு அதில் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்

  5. 5

    பிறகு அதில் 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட்டு அதில் 4 பச்சை‌ மிளகாய் கீரி சேர்க்க வேண்டும்

  6. 6

    அடுத்து அதில் ஒரு கையளவு கொத்தமல்லித்தழை ஒரு கையளவு புதினா இலைகள் பத்து கருவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்

  7. 7

    பிறகு அதில் பொடியாக நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்

  8. 8

    அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்

  9. 9

    நாம் சேர்த்துள்ள மசாலா களவைகளுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் முழுவதும் வற்றி மசாலாவும் நன்கு வேகும் வரை நன்றாக வதக்க வேண்டும்

  10. 10

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் சோம்பு கசகசா முந்திரி பருப்பு கலவையை சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க விட வேண்டும்

  11. 11

    மசாலா கலவை கொதிப்பதற்குள் நாம் ஒன்றரை டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

  12. 12

    இப்போது நாம் சேர்த்த தேங்காய் மசாலா கலவை நன்றாக கொதித்து வரும் சமயத்தில் நாம் கலக்கி வைத்துள்ள கடலை மாவு தண்ணியை அதனுடன் சேர்க்க வேண்டும்

  13. 13

    ஒரு இரண்டு நிமிடத்தில் நாம் கடலை மாவு தண்ணீர் சேர்த்து உள்ளதால் சால்னாவின் பதம் லேசாக கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் நாம் ஒரு டேபிள்ஸ்பூன் சிக்கன் மசாலா சேர்த்து கலக்கி விட்டு அதனுடன் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்

  14. 14

    பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயை மூடி வைத்து 20 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்

  15. 15

    20 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் சால்னா நன்றாக கொதித்து நாம் சேர்த்துள்ள எண்ணைய் எல்லாம் மேலே பிரிந்து வந்திருக்கும் இந்த சமயத்தில் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி மூடி வைக்கவேண்டும் அடுப்பை அணைத்து விடலாம்

  16. 16

    பத்து நிமிடம் கழித்து திறந்து பாருங்கள் இதோ மிகவும் ருசியான பரோட்டா பூரி சப்பாத்தி இடியாப்பம் போன்றவற்றிற்கு மிகவும் சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும் கையேந்தி பவன் ஸ்டைல் எம்டி சால்னா சுட சுட தயார் வாங்க சுவைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes