😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.

அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.

ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1/4 கப்- ஜவ்வரிசி
  2. 1 கப்- தண்ணீர்
  3. 1கப்- பால்
  4. 1/2 கப்- சர்க்கரை
  5. 2 - ஏலக்காய்
  6. 1 தே.க - முந்திரி பருப்பு
  7. 1 தே.க- திராட்சை
  8. 1மேஜக்கரண்டி- நெய்
  9. 1 சிட்டிகை- உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஜவ்வரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கண்ணாடி பாதம் ஆகும் வரை வேக வைக்கவும்.(ஊற வைத்தால் விரைவில் வெந்துவிடும் இல்லையெனில் அதிக நேரம் எடுக்கும்.)

  2. 2
  3. 3

    பிறகு அதனுடன் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். இல்லை என்றால் பால் பொங்கி வழிந்து விடும்.

  4. 4

    பால் கொதித்ததும் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பின் ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஏலக்காய் பவுடர் சேர்த்துக் அடுப்பை அணைக்கவும்.

  5. 5

    இதனுடன் சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். (இனிப்பு பண்டங்களில் உப்பு சேர்ந்தால் சுவையை கூட்டும்)

  6. 6

    கரண்டியில் நெய் ஊற்றி ஊருகியதும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும். (ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்)

  7. 7
  8. 8

    😋🏵️🥛சுலபமான கமகமக்கும் ஜவ்வரிசி பாயாசம் சுவையாக தயார்.😋🏵️🥛

  9. 9

    பாயசம் செய்து சிறிது நேரத்திற்கு பிறகு கட்டியாகி விட்டால் சூடான பால் அல்லது தண்ணீர் சேர்த்தால் பரிமாற சரியாக இருக்கும்.

  10. 10
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes