பருப்பு மிளகு ரசம்

#refresh1
பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....
பருப்பு மிளகு ரசம்
#refresh1
பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் மிளகு சேர்த்து மிளகு நன்றாக பொரியும் வரை வறுத்தெடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் வைத்து விடலாம்
- 3
பிறகு அதே கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து சீரகத்தின் கலர் மாறி அதன் வாசனை வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும் அடுப்பை குறைவான தீயில் வைக்க வேண்டும்
- 4
நாம் வறுத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பொடியாக்கிக் கொள்ள வேண்டும் இப்போது ரசத்திற்கு தேவையான ரசப்பொடி தயார்
- 5
இப்போது நாம் பருப்பு தண்ணீர் தயாரிக்க வேண்டும் அதற்கு 50 கிராம் துவரம் பருப்பை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும் பருப்பு நன்றாக வெந்து தண்ணீரில் கரைந்து விடும் அளவிற்கு வேக வைக்க வேண்டும்
- 6
ரசம் தாளிப்பதற்கு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் 3 வர மிளகாய் சேர்த்து பின்பு அதில் கால் டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்
- 7
கடுகு பொரிந்தவுடன் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் 2 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவேண்டும் அதனுடன் கால் டேபிள்ஸ்பூன் அளவிற்கு மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும்
- 8
தக்காளி வெந்தவுடன் நாம் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதனுள் சேர்த்து புளிக் கரைசலின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக விட வேண்டும்
- 9
பிறகு நாம் வேக வைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்க்க வேண்டும்
- 10
பருப்புத் தண்ணீர் சேர்த்தவுடன் பருப்பு தண்ணீர் கொதிக்கும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும் அதாவது 2 கொதி வரும் வரை கொதிக்க விட வேண்டும்
- 11
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் நாம் அரைத்த மிளகு சீரகம் ரசப்பொடியிலிருந்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து விட வேண்டும்
- 12
ரசப்பொடி சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி வரும் வரை கொதிக்கவிட வேண்டும்
- 13
பிறகு ஒரு கையளவு கொத்தமல்லி இலையை தூவி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம்
- 14
இதோ மிகவும் குறைவான நேரத்தில் சத்தான ஆரோக்கியமான மிகவும் சுவையான பருப்பு மிளகு ரசம் தயார் வாங்க சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
-
-
-
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book karunamiracle meracil -
-
பச்சை ரசம்
#refresh1ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை Vijayalakshmi Velayutham -
-
-
-
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
-
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar -
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana
More Recipes
கமெண்ட்