உருண்டை குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு உருண்டை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலைப்பருப்பு, கால் கப் துவரம்பருப்பு மற்றும் 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், கருவேப்பிலை சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.இட்லி தட்டில் எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.அதனுடன்150 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயம் மற்றும் 50 கிராம் அளவு பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். - 4
அதனுடன் ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.தயாராக வைத்துள்ள பருப்பு உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 5
ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி சீரகம், மற்றும் நான்கு அல்லது ஐந்து முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குழம்பு கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- 6
சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி
Similar Recipes
-
ஆட்டு நுரையீரல் குழம்பு
நுரையீரலை சுத்தம் செய்து குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,வருத்து அறைக கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அறைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும்,.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, 4வர மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து பின் வேக வைத்த நுரையீரலை சேர்த்து, அறைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான ஆட்டு நுரையீரல் குழம்பு தயார். Uma shanmugam -
-
-
-
-
ரோடு கடை டால் தட் கா
2 முறை தாளிப்பதால் நல்ல சுவை, மணம். இது பருப்பு, சாம்பார் இல்லை . #SS Lakshmi Sridharan Ph D -
-
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
நார்தம் பழ சாதம் (citron or grapefruit rice recipe in tamil)
#made4 # கலவை சாதம்மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் ஏகப்பட்ட பழ மரங்கள். நார்தம்பழங்கள் (கேடாரங்காய்) நூற்றுகணக்காய் உண்டு. அம்மா அதில் சுவையான கலவை சாதம் செய்வார். Grapefruit நார்தம் பழ போல் ஒரு பழம். பக்கத்து விட்டுக்கார நண்பர் பழங்கள் கொடுத்தார். அதில் கலவை சாதம் ஊறுகாய் செய்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
சீராளம் (Seeralam Traditional Recipe)
#vattaram #week1 திருவள்ளூர் மாவட்டம் பஜாரில் சுந்தரம் ஸ்வீட்ஸ் கடையில் ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் ஃபுட், இவர்கள் நான்கு தலைமுறைகளாக இதை செய்து விற்று வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சீராளம் ஒரு பாரம்பரியம் மிக்க உணவும் கூட Shailaja Selvaraj -
-
More Recipes
கமெண்ட்