எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 60கிராம் பச்சை பயிறு
  2. 10சின்ன வெங்காயம்
  3. 2மிளகாய்
  4. 2வர மிளகாய்
  5. 10பூண்டு பற்கள்
  6. கத்தரிக்காய்(விருப்பம் இருந்தால் சேர்க்க)
  7. 1 டீஸ்பூன் மல்லி விதை (அல்லது மல்லித்தூள்)
  8. 1 டீஸ்பூன் சீரகம்
  9. 2டீஸ்பூன் கடலை எண்ணெய்
  10. தேவையான அளவுஉப்பு
  11. தாளிக்க:கடுகு, கறிவேப்பிலை,கடலை எண்ணெய், வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் பச்சை பயிரை நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பயிறு வேக தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்ததும் பச்சை பயிறு மற்றும் 1தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    அதேசமயம் வாணலியில், எண்ணெய் ஊற்றி, மல்லி விதை மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் பூண்டு,கத்தரிக்காய், மிளகாய்,வர மிளகாய் மற்றும் 1 தக்காளி இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்

  4. 4

    பயிறு, பாதி வெந்ததும் வதக்கிய பொருட்களை பயிறுடன் சேர்த்து வேக வைக்கவும். உப்பு சேர்க்கவும்.நன்றாக எல்லாம் சேர்ந்து கொதித்து வெந்ததும் வடிகட்டி பருப்பை கடையவும்

  5. 5

    இனி,கடைந்த பருப்புடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து,உப்பு பார்த்து 5நிமிடங்கள் கொதிக்க விடவும்

  6. 6

    கடைசியாக கடுகு,கறிவேப்பிலை,வர மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

    உங்களுக்கு பிடித்தவாறு,கடைசல் கெட்டியாக அல்லது குழம்பாக வைக்கவும்

  7. 7

    அவ்வளவுதான். சுவையான பச்சைப்பயறு கடைசல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes