கல்யாணவீட்டு சுண்டவத்தல் குழம்பு

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
8 பேர்
  1. 35சுண்டவத்தல்
  2. 10சின்ன வெங்காயம்
  3. 1முழு பூண்டு
  4. வதக்கி அரைக்க:
  5. (2ஸ்பூன் நல்லெண்ணெய்,
  6. 15சின்ன வெங்காயம்,
  7. 5பல் பூண்டு
  8. 2பெரிய தக்காளி)
  9. வறுத்து அரைக்க:
  10. 2ஸ்பூன் நல்லெண்ணெய்
  11. 1டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு
  12. 1டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  13. 2டேபிள் ஸ்பூன் மல்லிவிதை
  14. 1டேபிள் ஸ்பூன் சீரகம்
  15. 1/4ஸ்பூன் வெந்தயம்,
  16. 1டேபிள் ஸ்பூன் பச்சரிசி
  17. 2காஷ்மீர் மிளகாய்
  18. 3வரமிளகாய்
  19. 1/4 ஸ்பூன் மிளகு
  20. சிறிதளவுகறிவேப்பிலை)
  21. 1/2ஸ்பூன் பெருங்காயத்தூள்
  22. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  23. தேவையானஅளவு புளிக்கரைசல்
  24. சிறிதளவுவெல்லம்
  25. தாளிக்க:
  26. 3ஸ்பூன் நல்லெண்ணெய்
  27. கடுகு
  28. உளுத்தம்பருப்பு
  29. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வறுக்க கொடுக்கப்பட்ட பொருள்களை சேர்த்தது, வறுத்து ஆறவைக்கவும்.

  2. 2

    அதே வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி பூண்டு சேர்த்து வதக்கி,பின் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஆறவைத்து,இரண்டு மசலாக்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

  4. 4

    வாணலியில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சுண்டவத்தல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.

  5. 5

    கடாயில் 3ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, கருவேப்பிலை தாளித்து, சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வதங்கியதும்,புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.இதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

  7. 7

    நன்றாக கொதித்ததும் அரைத்த கலவையை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.

  8. 8

    நன்றாக கொதித்ததும் வறுத்த சுண்ட வத்தலை குழம்பில் சேர்க்கவும்.சிறிது நேரம் கழித்து உப்பு பார்க்கவும்.

  9. 9

    கடைசியாக வெல்லம் சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

    அவ்வளவுதான் சுவையான சுண்டவத்தல் குழம்பு ரெடி

  10. 10

    குறிப்பு:
    சுண்டவத்தலில் உப்பு சேர்த்து இருப்பதால் குழம்பிற்கு தேவையான உப்பை கடைசியில் சரிபார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes