மாம்பழ ராகி கும்பிலப்பம்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#3M
கேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 100 கிராம் வெல்லம்
  2. 1/2 கப் தண்ணீர்
  3. மாம்பழ கலவை தயாரிக்க:
  4. 1 கப் நறுக்கிய மாம்பழம்
  5. 1மேஜைக் கரண்டி நெய்
  6. 4 மேஜை கரண்டி சர்க்கரை
  7. 3/4 கப் துருவிய தேங்காய்
  8. 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
  9. 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  10. ராகி மாவு கரைசல் தயாரிக்க:
  11. 3/4 கப் ராகி மாவு
  12. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
  13. 1 சிட்டிகை உப்பு
  14. மேலே அலங்கரிக்க:
  15. 1/4 கப் நறுக்கிய மாம்பழ துண்டுகள்
  16. 6முந்திரிப் பருப்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பின் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மாம்பழத் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் சிறு தீயில் வதக்கவும். இதில் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து சர்க்கரை கரையும் வரை வதக்கவும். இறுதியில் ஏலக்காய்த்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் ராகி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். இதில் ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கூடவே வெல்லப் பாகை வடித்து சேர்த்துக் கொள்ளவும். இதனை கட்டியில்லாமல் கலந்து விடவும்.

  4. 4

    இந்த மாவுக் கரைசலில் மாம்பழ கலவையை சேர்த்து கலந்து விடவும். வாழை இலைகளை செவ்வகமாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கூம்பு வடிவில் மடித்து தூட்பிக்கை வைத்து குத்தி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு கிளாஸில் மடித்த வாழை இலையை வைக்கவும். இதில் ஒரு குழிக்கரண்டி ராகி மாவு கலவையை ஊற்றவும். மேலே நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் ஒரு முந்திரிப்பருப்பை வைக்கவும். இவ்வாறு தயார் செய்த அனைத்தையும் இட்லி பாத்திரத்தில் 30 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.

  6. 6

    சத்தும் சுவையும் நிறைந்த மாம்பழ ராகி இலை அடை சுவைக்க தயார். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். இது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும்.

  7. 7

    குறிப்பு:
    1. கொழுந்து வாழை இலையாக எடுக்கவும். இவை மடிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
    2. முந்திரிப்பருப்பு டன் விருப்பப்பட்ட நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
    3. இட்லி பாத்திரத்தில் ஒரு ஸ்டான்ட் வைத்து அதன் மேல் தட்டை வைத்து இந்த டம்ப்லர்களை அடுக்கி வேகவிடவும்.
    4. வாழையிலை இல்லையென்றால் சிறிய கிண்ணத்தில் நெய் தடவியும் ராகி கலவையை ஊற்றி வேகவிடலாம்.
    5. ராகி மாவு மாம்பழ கலவையை ஒவ்வொரு இலையிலும் அதிகமாக ஊற்றக் கூடாது. சில நேரங்களில் சரியாக வேகாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes