தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. தேவையான அளவு தட்டுவடை
  2. 1துருவிய பீட்ரூட்
  3. 2 துருவிய கேரட்
  4. 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  5. சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
  6. அரை மூடி எலுமிச்சை பழம்
  7. சிகப்பு சட்னி செய்ய
  8. 1 பெரிய வெங்காயம்
  9. 2 தக்காளி
  10. 3பல் பூண்டு
  11. 3வரமிளகாய்
  12. சிறிதளவுபுளி
  13. தேவையான அளவு உப்பு
  14. தேவையான அளவு உப்பு
  15. பச்சை சட்னி செய்ய
  16. தேவையான அளவு கொத்தமல்லி இலைகள்
  17. தேவையான அளவு புதினா இலைகள்
  18. சிறுதுண்டு இஞ்சி
  19. 3 பச்சை மிளகாய்
  20. தேவையான அளவு தேங்காய்
  21. தேவையான அளவு உப்பு
  22. தேவையான அளவு எலுமிச்சைச் சாறு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சிகப்பு சட்னி செய்வதற்கு வெங்காயம்,தக்காளி, வரமிளகாய், பூண்டு,புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பச்சைச் சட்னி செய்வதற்கு கொத்துமல்லி இலைகள், புதினா இலைகள்,பச்சை மிளகாய்,இஞ்சி, தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அரைத்த பச்சை சட்னி, சிகப்பு சட்னி மற்றும் துருவிய கேரட்,பீட்ரூட் நறுக்கிய கொத்தமல்லி இலைகள், நறுக்கிய வெங்காயம்,அரை மூடி எலுமிச்சை ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    தட்டுவடையின் ஒரு பகுதியில் முதலில் சிவப்பு சட்னியை தடவி அதன் மேலே பீட்ரூட் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு பிழியவும்.

  5. 5

    பிறகு மற்றும் ஒரு தட்டு வடை எடுத்து அதன் ஒரு பகுதியில் பச்சை சட்னியை தடவி ஏற்கனவே செய்து வைத்துள்ள தட்டு வடை என் மேல் வைத்து ஒரு அழுத்து அழுத்தவும் தேவைப்பட்டால் மேலே சிறிது பீட்ரூட் கேரட் தூவிக் கொள்ளலாம் இப்பொழுது அருமையான சுவையான காரசாரமான தட்டுவடை செட் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes