சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் சிறிய உருளைக்கிழங்கை கழுவி குக்கரில் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு 2 விசில் வேக வைத்து எடுத்து வைக்கலாம். ஆறியவுடன் தோல் நீக்கி, கடாயில் 5 டீஸ்பூன் ஆயில் விட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வைக்கவும்.
- 2
பொரித்ததை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே கடாயில் மேலும் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, கடுகு 1 டீஸ்பூன்,1 வரமிளகாய் கிள்ளியது, சிறிதளவு பெருங்காயத் தூள், 2 முழு பூண்டு தட்டியது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கிய உடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து, பொரித்து வைத்த உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து சிறுது நேரம் மூடி விடவும்.
- 4
பிறகு நன்கு கிளறி விடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
- 5
சுவையான உருளைக்கிழங்கு காரகறி ரெடி😋😋 தயிர் சாதம், புளி சாதம், ரசம் சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
Similar Recipes
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)